தமிழ் அடிபோடு யின் அர்த்தம்

அடிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

 • 1

  (தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள) முன்னேற்பாடாக ஒன்றைச் சொல்லுதல் அல்லது செய்தல்.

  ‘அவன் தன் கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்தபோதே கடனுக்கு அடிபோடுகிறான் என்று நினைத்தேன்’
  ‘அவன் கும்பிடுபோட்டால் பணத்துக்கு அடிபோடுகிறான் என்று அர்த்தம்’

 • 2

  (சண்டை போன்றவற்றைத் தொடங்க) திட்டம்போடுதல்.

  ‘காலையிலிருந்தே சண்டைக்கு அடிபோடுகிறான்’