தமிழ் அடிமை யின் அர்த்தம்

அடிமை

பெயர்ச்சொல்

 • 1

  (முற்காலத்தில்) தன்னுரிமை இழந்து, பிறருக்கு உடமையாக இருந்த பணியாள்.

  ‘அரசர்கள் போரில் சிறைப்பிடித்தவர்களை அடிமைகளாக மாற்றினர்’
  ‘கிரேக்கர்கள் காலத்திலேயே அடிமை முறை இருந்தது’

 • 2

  ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.

  ‘ஆங்கிலேய அடிமைத் தளையை உடைத்தெறியவே இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கப்பட்டது’
  ‘உலகில் அடிமைப்பட்டுக் கிடந்த பல நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் விடுதலையடைந்தன’

 • 3

  அளவுக்கு அதிகமாக ஒன்றில் ஈடுபட்டு முற்றிலும் தன்னை இழந்துவிடும் நிலை.

  ‘போதை மருந்துக்கு அடிமையாகித் தன் வாழ்வை நாசமாக்கிக்கொண்டான்’