தமிழ் அடிவருடு யின் அர்த்தம்

அடிவருடு

வினைச்சொல்-வருட, -வருடி

  • 1

    (சுயநலத்திற்காக ஒருவரை) மகிழ்விக்க வேண்டிச் சுயமரியாதையை இழக்கும் வகையிலான செயல்கள் செய்தல்.

    ‘நிர்வாகத்தினரை அடிவருடிப் பதவி உயர்வு பெற்றுவிட்டார்’
    ‘அதிகாரிகளை அடிவருடத் தயங்காதவர் தொழிலாளர்களைக் கைவிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை’