தமிழ் அடைபடு யின் அர்த்தம்

அடைபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  வெளியேற முடியாதபடி அல்லது வெளியே போகாமல் (ஒரே இடத்தில்) இருத்தல்.

  ‘புலி அடைபட்டிருந்த இரும்புக் கூண்டைப் பார்த்தான்’
  ‘செய்யாத குற்றத்துக்கு இப்படிச் சிறையில் அடைபட்டிருக்கிறோமே என்று வருந்தினான்’
  ‘இரண்டு நாட்களாக ஏன் வீட்டிலேயே அடைபட்டிருக்கிறாய்?’
  உரு வழக்கு ‘அதிகாரங்கள், வசதிகள் என்ற போட்டா போட்டி உலகில் நீ அடைபட்டுக் கிடக்கிறாய்’

 • 2

  (குழாய்கள், நாளங்கள் போன்றவற்றில் ஓட்டம்) தடைபடுதல்.

  ‘இரு முக்கிய நாளங்களுள் ஒன்று அடைபட்டிருந்ததால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது’
  ‘கழிவுநீர்க் குழாய் அடைபட்டிருந்ததால் அசுத்தமான தண்ணீர் அங்கு தேங்கியிருந்தது’
  ‘நிலச்சரிவினால் பாதை அடைபட்டுப் போக்குவரத்து நின்றுவிட்டது’

 • 3

  (வரம்பு, வரையறை போன்றவற்றுக்குள்) அடங்கியிருத்தல்.

  ‘சில கலைஞர்கள் சமூகத்தின் அளவுகோல்களுக்குள் அடைபடாமல் இருந்தனர் என்பது வியப்பல்ல’

 • 4

  (கடன்) தீர்தல்.

  ‘என் படிப்புக்காக வாங்கிய கடன் இப்போதுதான் அடைபட்டது’
  ‘வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன் அடைபட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?’