தமிழ் அடையாளம் யின் அர்த்தம்

அடையாளம்

பெயர்ச்சொல்

 • 1

  (இன்னார், இன்னது, இப்படிப்பட்டது என) தெரிந்துகொள்ள உதவும் தோற்றம் அல்லது தன்மைக் குறிப்பு.

  ‘அவர் மாறுவேடத்தில் இருந்தாலும் அவரை அடையாளம் தெரிந்துகொள்ள முடிந்தது’
  ‘குழந்தை இப்போதுதான் எல்லோரையும் அடையாளம் கண்டுகொள்கிறது’
  ‘காம்போதி ராகத்தின் அடையாளம் என்ன?’

 • 2

  ஒன்றை நினைவுபடுத்தும் அல்லது எடுத்துக்காட்டும் சின்னம்.

  ‘நம் நட்பின் அடையாளமாக இதை ஏற்றுக்கொள்’
  ‘வைர மோதிரம் அவருடைய வசதிக்கு ஒரு அடையாளம்’

 • 3

  ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

  ‘படித்துக்கொண்டிருந்த பக்கத்தில் அடையாளத்துக்கு ஒரு தாளை வைத்தான்’
  ‘எங்கள் தெருவுக்கு எதிரே ஒரு மணிக்கூண்டு இருக்கும். அதுதான் அடையாளம்’

 • 4

  ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.

  ‘பாம்பு வந்து போனதற்கான அடையாளம் இல்லை’
  ‘ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர் அவர். இருந்த அடையாளமே தெரியாதவாறு மறக்கப்பட்டுவிட்டார்’

 • 5

  (பண்பாடு, கருத்து போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும்) தனித்துவம் கொண்ட கூறு அல்லது அம்சம்; ஒருவர் உணரும் தனித்துவம் கொண்ட தன்மை.

  ‘மொழி என்பது ஒரு பண்பாட்டின் அடையாளம்’
  ‘விரைவாகப் பரவிவரும் மேற்கத்திய நாகரிகத்தின் விளைவாக நம் அடையாளத்தை இழந்துவிடும் அபாயத்தில் இருக்கிறோம்’
  ‘சமூக வாழ்க்கை ஒருவருக்குப் பல்வேறு அடையாளங்களைத் தருகிறது’

 • 6

  (ஒன்று உண்டாக அல்லது நிகழ இருப்பதற்கான) அறிகுறி.

  ‘சளியுடன் ரத்தம் வருவது காசநோயின் அடையாளமாக இருக்கலாம்’
  ‘இரு நாடுகளுக்கிடையே போர் வருவதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன’

 • 7

  குறிப்பிட்ட வகையில் பொருள்படும் குறியீடு.

  ‘சிவப்பு விளக்கு எச்சரிக்கைக்கான அடையாளம்’
  ‘இடது பக்கம் செல்ல வேண்டும் என்று அடையாளம் இடப்பட்டிருந்தது’

 • 8

  (பெரும்பாலும் பெயரடையாக) (எதிர்ப்பைக் காட்டும்) குறியீடாக அமையும் வெளிப்பாடு.

  ‘தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்வார்கள்’