தமிழ் அடையாளம் காட்டு யின் அர்த்தம்

அடையாளம் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    (பிறர் அறிந்திராத ஒன்றை) இனம்கண்டு பிறருக்குத் தெரியப்படுத்துதல்.

    ‘சிறுசிறு கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த என்னை எல்லாருக்கும் அடையாளம் காட்டியவர் இந்த இசையமைப்பாளர்தான்’
    ‘அணுசக்தியின் நாச விளைவுகளை இரண்டாம் உலகப் போர் அடையாளம் காட்டியது’
    ‘இந்தக் கதை வாசகர்களுக்கு ஒரு புதிய உலகை அடையாளம் காட்டியது’