தமிழ் அணுகுமுறை யின் அர்த்தம்

அணுகுமுறை

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றைச் செய்ய அல்லது ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண மேற்கொள்ளும் வழிமுறை.

  ‘சரியான அணுகுமுறையின் மூலமே பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணலாம்’
  ‘தமிழைக் கற்பிப்பதில் நவீன அணுகுமுறை தேவைப்படுகிறது’
  ‘பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கையாள வேண்டிய அணுகுமுறை பற்றித் தீர்மானிப்பதற்கான கூட்டம்’
  ‘மொழியியல் அணுகுமுறை’

 • 2

  கண்ணோட்டம்.

  ‘சுதந்திரம் பற்றிய பாரதியின் அணுகுமுறை மாறுபட்டு இருந்தது’
  ‘அறிவியல் அறிவு இல்லாமல் விலங்குகளைப் பற்றிய ஒரு சரியான அணுகுமுறையை மனிதன் பெற முடியாது’