தமிழ் அதட்டல் யின் அர்த்தம்

அதட்டல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    குரலில் வெளிப்படுத்தும் கண்டிப்பு.

    ‘‘இனிமேல் அதைப் பற்றி என்னிடம் பேசாதே’ என்றார் அதட்டலாக’
    ‘அவளுடைய அதட்டலான குரல் எனக்கு வியப்பை அளித்தது’
    ‘ஒரு அதட்டல் போட்டால்தான் பையன் அடங்குவான்’