தமிழ் அத்தனை யின் அர்த்தம்

அத்தனை

பெயர்ச்சொல்

 • 1

  (முன் குறிப்பிட்ட) அந்த அளவு; அவ்வளவு.

  ‘உனக்கு என்ன அத்தனை அவசரம்?’
  ‘அத்தனை பணத்துக்கு எங்கே போவேன்?’
  ‘அத்தனை மாணவர்களும் புத்திசாலிகள்’
  ‘நேற்றுதானே ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அத்தனையும் செலவாகிவிட்டதா?’
  ‘அத்தனைக்கும் காரணம் அவன்தான்’

 • 2

  (எடுத்துக்காட்டாகக் கூறுகையில்) குறிப்பிட்ட வடிவ அளவு.

  ‘புகையிலையைக் கடுகத்தனை கிள்ளி வாயில் போட்டுக்கொண்டார்’
  ‘மலையத்தனை துன்பம்’

 • 3

  (அடையாக வரும்போது) (கூறப்படும்) அந்த அளவு.

  ‘அத்தனை வேலைகளையும் நான் ஒருவனே செய்து முடித்தேன்’
  ‘நமக்குத் தேவைப்படும் அத்தனை மூலதனமும் ஒரே இடத்திலிருந்து கிடைக்காது’
  ‘அத்தனை பேருக்குச் சமைக்க நம்மிடம் பாத்திரம் இல்லை’
  ‘அத்தனை வீடுகளிலும் பட்டாசு வெடித்தார்கள்’

 • 4

  தன்மையின் மிகுதியைக் குறிக்க அடையாகப் பயன்படும் சொல்.

  ‘அத்தனை பெரிய வீரனா அவன்?’
  ‘அகராதியைத் தயாரிப்பது அத்தனை எளிதல்ல’
  ‘அவன் அத்தனை மோசமானவன் என்று எனக்குத் தெரியாது’