தமிழ் அத்து யின் அர்த்தம்

அத்து

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (நிலத்தின்) எல்லை.

  ‘நம் மனை என்பதற்கு அத்தாக இந்த வேலியைப் போட்டுவை’
  ‘அதை அத்தாக வைத்துக்கொண்டு நிலத்தை அள’

தமிழ் அத்து யின் அர்த்தம்

அத்து

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (உரிய மதிப்பு இல்லாமல்போனாலும் பொருளாக) கடனுக்குத் தரும் உத்திரவாதம்.

  ‘ஒரு அத்து இல்லாமல் உனக்கு எப்படி அவ்வளவு பெரிய தொகையைக் கடனாகத் தர முடியும்?’
  ‘இதை அத்துக்கு வைத்துக்கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் கொடு’