தமிழ் அதற்குள் யின் அர்த்தம்

அதற்குள்

(அதற்குள்ளே)

இடைச்சொல்

  • 1

    எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே ஒரு செயல் நிகழ்ந்துவிட்டது என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டும் இடைச்சொல்.

    ‘இப்போதுதான் சமையலறைக்குள் போனாய், அதற்குள் சமையல் முடிந்துவிட்டதா!’
    ‘இப்போதுதான் வந்தாய்; அதற்குள் புறப்படுகிறாயே!’
    ‘போன வாரம்தான் இந்தச் செருப்பு வாங்கினேன். அதற்குள் அறுந்து விட்டது’