தமிழ் அந்தஸ்து யின் அர்த்தம்

அந்தஸ்து

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தகுதி.

  ‘எழுத்தாளர் என்ற அந்தஸ்தை அவர் என்றோ இழந்துவிட்டார்’
  ‘கிரகம் என்ற அந்தஸ்தை புளூட்டோ இழந்துவிட்டதாக வானியல் அறிஞர்கள் சமீபத்தில் அறிவித்தார்கள்’

 • 2

  செல்வாக்கு; கௌரவம்.

  ‘பல தலைமுறையாக அந்தஸ்தோடு இருந்துவரும் குடும்பம் இது’
  ‘அந்தஸ்து என்ற போர்வைக்குப் பின்னால் அற்பத்தனம்’

 • 3

  (பல நிலைகளாக வகுக்கப்பட்ட அமைப்பில் மேல்மட்டத்தில்) குறிப்பிட்ட நிலை.

  ‘வாரியத் தலைவர் பதவிக்கு அமைச்சர் அந்தஸ்து தரப்படும்’
  ‘கட்சித் தலைவர் அந்தஸ்தில் இருந்துகொண்டு நான் அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது’