தமிழ் அந்தோ யின் அர்த்தம்

அந்தோ

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பிறருடைய துயரத்துக்கு இரக்கம் தெரிவிக்கும் முறையில் அல்லது தன் நிலைமைக்கு வருந்தும் முறையில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அந்தக் கிழவரால் நடக்கவும் முடியவில்லை; கையில் தடியும் இல்லை. அந்தோ பரிதாபம்!’
    ‘வேலை போய்விட்டதே. அந்தோ நான் என்ன செய்யப்போகிறேன்?’