தமிழ் அநேகமாக யின் அர்த்தம்

அநேகமாக

வினையடை

 • 1

  பெரும்பாலும்.

  ‘விமானப் பயணிகள் அநேகமாக ஒரே மாதிரியான பெட்டிகள் வைத்திருக்கிறார்கள்’
  ‘காதலர்கள் அநேகமாகக் கடற்கரையில்தான் சந்திக்கின்றனர்’
  ‘என்னைத் தவிர அநேகமாக எல்லோரும் சாப்பிட்டுவிட்டார்கள்’

 • 2

  (ஒருவர்) அறிந்த அளவில்.

  ‘அநேகமாக அவர் ஊரிலிருந்து வந்திருப்பார்’
  ‘அநேகமாக இது வீண் முயற்சிதான்’