தமிழ் அன்பர் யின் அர்த்தம்

அன்பர்

பெயர்ச்சொல்

 • 1

  (பிரபலமான) ஒருவர் மீது தன் அன்பை வெளிப்படுத்திக்கொள்பவர்; அன்பிற்கு உரியவர்.

  ‘அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்ததும் பல அன்பர்கள் வந்து பார்த்துச் சென்றனர்’
  ‘நாவலைப் படித்துவிட்டுப் பல அன்பர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்’
  ‘‘அன்பர்களே’ என்று பேச்சைத் தொடங்கினார்’

 • 2

  ஒரு துறையில் ஆர்வம் உடையவர்.

  ‘சென்னையில் திரைப்பட அன்பர்கள் கூட்டம் நடந்தது’
  ‘எழுத்தாளரும் இலக்கிய அன்பருமாகிய என் நண்பர்’