தமிழ் அனுதாபம் யின் அர்த்தம்

அனுதாபம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  மற்றவர் அனுபவிக்கும் துன்பத்தைக் கண்டு ஒருவர் கொள்ளும் வருத்த உணர்வு; இரக்கம்.

  ‘ஊனமுற்றவருக்குத் தேவை நம் உதவியே தவிர அனுதாபம் அல்ல’
  ‘உடல்நலம் இல்லாத கிழவரிடம் எல்லோரும் அனுதாபத்தோடு பேசினார்கள்’

 • 2

  (ஒருவர் மரணம் அடைந்ததற்கு) தெரிவிக்கும் வருத்தம்; இரங்கல்.

  ‘விபத்தில் உயிர் இழந்த உறுப்பினருக்கு அனுதாபம் தெரிவித்துச் சபை ஒத்திவைக்கப்பட்டது’
  ‘தங்கள் தாயார் மரணம் அடைந்த செய்தி அறிந்தோம். உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்’