தமிழ் அப்பன் யின் அர்த்தம்
அப்பன்
பெயர்ச்சொல்
- 1
பேச்சு வழக்கு தந்தை.
‘அப்பன், ஆத்தாள் இல்லாத அநாதை என்று என்னை நினைத்துவிட்டாயா?’ - 2
இறைவனைக் குறிக்கும்போது தந்தை என்று பொருள்படும் சொல்.
‘இறைவா! எல்லா உயிருக்கும் அம்மையும் அப்பனும் நீயல்லவா?’‘அப்பனே முருகா! என்னைக் காப்பாற்று’ - 3
(ஒருவருக்குச் சவால் விடுவது போன்ற சூழலில்) குறிப்பிடப்படுபவரைவிடத் திறமையானவர்.
‘என்னை வெல்ல உன் அப்பனாலும் முடியாது’‘அவன் எல்லோருக்கும் அப்பன்; ஏமாற்றி விட்டுப் போய்விடுவான்’