தமிழ் அப்பம் யின் அர்த்தம்

அப்பம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஊறவைத்து அரைத்த) அரிசி மாவில் வெல்லம் சேர்த்து எண்ணெயில் வேக வைத்த தின்பண்டம்.

 • 2

  கிறித்தவ வழக்கு
  கோதுமை ரொட்டி.

  ‘ஆண்டவரே, எங்களுக்கு உரிய அப்பத்தை எங்களுக்குத் தாரும்!’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு ஆப்பம்.

  ‘இன்று எங்கள் வீட்டில் அம்மா அப்பம் சுட்டாள்’
  ‘பால் அப்பம் வாங்கிக் கொண்டுவா’
  ‘சம்பலுடன் அப்பம் சாப்பிட்டேன்’