தமிழ் அப்போது யின் அர்த்தம்

அப்போது

வினையடை

  • 1

    (நிகழ்ச்சி நடந்த அல்லது நடைபெறும்) அந்த நேரத்தில்; குறிப்பிடப்படும் காலத்தின் ஒரு கட்டத்தில்.

    ‘என்னைத் திட்டிக்கொண்டிருந்தவன் முன் போய் நின்றேன். அப்போது அவன் முகத்தில் வழிந்த அசடு!’
    ‘2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அப்போது நீங்கள் இங்கு இருப்பீர்களா?’
    ‘சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலம். அப்போது அவர் புதுச்சேரியில் இருந்தார்’