தமிழ் அபாரம் யின் அர்த்தம்

அபாரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பாராட்டத் தகுந்த முறையில் இருப்பது; பிரமாதம்.

  ‘நேற்றைய இசை விழாவில் நாகஸ்வர வித்வான் அபாரமாக வாசித்தார்’
  ‘அபாரமான ஆட்டம்’

 • 2

  அளவற்றது.

  ‘அவர் பழமையில் அபார நம்பிக்கை கொண்டவர்’
  ‘அவர் ஆங்கிலேயராக இருந்தாலும் இந்தியாவின் மீது அபாரமான பற்றுக்கொண்டவர்’