தமிழ் அப்பு யின் அர்த்தம்

அப்பு

வினைச்சொல்அப்ப, அப்பி

 • 1

  (மை, சந்தனம் முதலியவற்றை) அதிகமாகப் பூசுதல்.

  ‘குழந்தை கண்களில் மையை அப்பிக்கொண்டு நின்றது’
  ‘வேர்க்குரு இருக்கும் இடத்தில் சந்தனத்தை நிறைய அப்பு’
  உரு வழக்கு ‘தேர்தலுக்காகச் சுவர்களையெல்லாம் சுவரொட்டிகளால் அப்பி விட்டார்கள்’

 • 2

  (தூசி முதலியன) அதிகமாகப் படிதல்.

  ‘உடம்பு முழுக்கச் சேறு அப்பியிருந்தது’
  உரு வழக்கு ‘உடம்பு முழுவதும் அக்கி அப்பியிருந்தது’