தமிழ் அம்சம் யின் அர்த்தம்

அம்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ளவற்றில் குறிப்பிட்ட ஒரு பகுதி.

  ‘கதை, வசனத்தோடு படத்தின் பிற அம்சங்களும் தரமாகவே இருக்கின்றன’
  ‘பொருளாதார வளர்ச்சிக்காக இருபது அம்சத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது’

 • 2

  எடுத்துக்கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை.

  ‘பெருந்தன்மைதான் அவருடைய சிறப்பான அம்சம்’

 • 3

  பேச்சு வழக்கு (ஒருவரின் அல்லது ஒன்றின் அமைப்புக்கு வேண்டிய அளவான) லட்சணம்; கச்சிதம்.

  ‘அம்சமான வீடு’