தமிழ் அம்மாள் யின் அர்த்தம்

அம்மாள்

பெயர்ச்சொல்

 • 1

  வயதான பெண்ணை மரியாதையுடன் குறிப்பிடும் சொல்.

  ‘எங்கள் வீட்டுக்கார அம்மாள் மிகவும் நல்லவள்’
  ‘அந்த அம்மாள் போகாத கோயில் இல்லை’

 • 2

  வயதான பெண்ணின் பெயருடன் மரியாதையைக் குறிக்க இணைக்கப்படும் சொல்.

  ‘கு. ப. ரா. சொல்லச்சொல்ல, சேது அம்மாள் எழுதுவார்’