தமிழ் அமுங்கு யின் அர்த்தம்

அமுங்கு

வினைச்சொல்அமுங்க, அமுங்கி

 • 1

  (பளு காரணமாக) அமிழ்தல்/சமமான பரப்பு குழிதல்.

  ‘கடலில் நொறுங்கி விழுந்த விமானத்தின் பகுதிகள் நீரில் அமுங்கிக்கொண்டிருந்தன’
  ‘பெட்டி மேல் உட்காராதே, அமுங்கிவிடும்’

 • 2

  (வெளிவராமல்) ஒடுங்குதல்.

  ‘கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல அவன் குரல் அமுங்கி ஒலித்தது’

 • 3

  (வீக்கம், கட்டி முதலியன) அளவில் குறைந்து சிறிதாதல்; உள்வாங்குதல்.

  ‘வேனல் கட்டி அமுங்கிவிட்டது’