தமிழ் அயோக்கியத்தனம் யின் அர்த்தம்

அயோக்கியத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    நேர்மையும், நாணயமும் இல்லாமல் நயவஞ்சகத்தனத்துடன் நடந்துகொள்ளும் தன்மை.

    ‘ஒரு சின்ன தோசை முப்பத்தி ஐந்து ரூபாயாம். எவ்வளவு அயோக்கியத்தனம்!’
    ‘அவனுடைய அயோக்கியத்தனம் தெரிந்தும் அவனிடம் போய்ப் பணத்தைக் கொடுத்திருக்கிறாயே?’