தமிழ் அரசல்புரசலாக யின் அர்த்தம்

அரசல்புரசலாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அரைகுறை நிலையில்; முழு விவரத்துடன் இல்லாமல்.

    ‘அவர்கள் சண்டையைப் பற்றி அரசல்புரசலாகக் கேள்விப்பட்டேன்’
    ‘இவர் அமைச்சர் ஆகலாம் என்று அரசல்புரசலாகப் பேசிக்கொள்கிறார்கள்’