தமிழ் அரசியல் யின் அர்த்தம்

அரசியல்

பெயர்ச்சொல்

 • 1

  ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்.

  ‘அரசியல் கோட்பாடுகளைப் பற்றிய நூல்கள்’

 • 2

  ஆட்சிசெய்வது பற்றிய கட்சிகளின் கொள்கைகளும் நடைமுறைகளும்/கட்சி விவகாரம்.

  ‘அவர் அரசியலிலிருந்து விலகலாம்’
  ‘அலுவலகத்தில் அரசியல் பேசாதீர்கள்’

 • 3

  (ஒரு அமைப்பு, அணி போன்றவற்றில்) அதிகாரத்தைக் குறிவைத்துச் செயல்படும் போக்கு.

  ‘இந்திய அணிக்குள் காணப்படும் அரசியல்தான் தோல்விக்குக் காரணம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்’
  ‘‘பல்கலைக்கழக நிர்வாகத்தின் அரசியலைக் கணக்கில் கொண்டுதான் நாம் செயல்முறைகளை வகுக்க வேண்டும்’ என்றார் பேராசிரியர்’