தமிழ் அரசு மரியாதை யின் அர்த்தம்

அரசு மரியாதை

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாழ்வில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள், பிரமுகர்கள் போன்றவர்களின் இறுதிச் சடங்கின்போது) காவல்துறையினர் அணி வகுத்து அரசு சார்பில் செலுத்தும் அஞ்சலி.

  ‘மறைந்த அமைச்சரின் சடலம் அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது’
  ‘நடிகர் சிவாஜி கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது’

 • 2

  முதல்வர் போன்றவர்கள் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருகைதரும்போது மாநிலக் காவல்துறை அணிவகுத்துச் செலுத்தும் மரியாதை.

  ‘சுதந்திர தினத்தன்று கொடியேற்ற வந்த முதல்வர் அரசு மரியாதையை ஏற்றார்’