அரணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அரணை1அரணை2

அரணை1

பெயர்ச்சொல்

 • 1

  பழுப்பும் கரும் பச்சையும் கலந்த நிறத்தில் பளபளப்பான உடலைக் கொண்ட, பல்லி இனத்தைச் சேர்ந்த பிராணி.

  ‘சில வகையான அரணைகளுக்குக் கால்கள் கிடையாது’
  ‘அரணை ஒரு விஷமற்ற பிராணி’

அரணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அரணை1அரணை2

அரணை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கணிதத்தில்) வகுத்தல் குறி.

  ‘பத்து அரணை இரண்டு சமன் ஐந்து’