தமிழ் அருமை யின் அர்த்தம்

அருமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மிகவும் பாராட்டும்படியானது; உயர்வாகச் சொல்லக் கூடியது.

  ‘அருமையான இசை’
  ‘அவன் தன் பங்கை அருமையாக நிறைவேற்றினான்’

 • 2

  (தகுதியில், விலையில்) மதிப்பு; உயர்வு.

  ‘சங்கிலியின் அருமை தெரியாமல் விற்றுவிட்டான்’
  ‘அவர் உயிருடன் இருந்தவரை எனக்கு அவர் அருமை தெரியவில்லை’

 • 3

  அன்பு; நேசம்.

  ‘அருமை நண்பன்’
  ‘அருமையாகப் பேணி வளர்த்த நாய்’

 • 4

  அபூர்வம்; அரிது.

  ‘மழை பெய்வது அருமையாகிவிட்டது’
  ‘இது போன்று மற்றொன்று கிடைப்பது அருமையிலும் அருமை’