தமிழ் அறி யின் அர்த்தம்

அறி

வினைச்சொல்அறிய, அறிந்து

 • 1

  (அனுபவம், படிப்பு, சிந்தனை போன்றவற்றின் மூலமாக) தெரிந்துகொள்ளுதல்.

  ‘உன்னை நன்றாக அறிந்திருக்கிற காரணத்தால்தான் இதைச் சொல்கிறேன்’
  ‘திமிங்கிலங்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்’
  ‘காலடி ஓசையை வைத்தே வருவது யார் என்று அறிந்துகொண்டேன்’
  ‘தத்துவங்களை அறியச் சிந்தனை வேண்டும்’

 • 2

  இப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்ளுதல்; உணர்தல்.

  ‘கஷ்டம் என்றால் என்ன என்று அறியாமல் வளர்ந்துவிட்டான்’