தமிழ் அறிவி யின் அர்த்தம்

அறிவி

வினைச்சொல்

  • 1

    (பேச்சு அல்லது எழுத்துமூலமாக ஒரு செய்தியை அதிகாரபூர்வமாக) பிறர் அறியச்செய்தல்.

    ‘‘வறட்சி காரணமாக நிலவரி ரத்துசெய்யப்படுகிறது’ என்று அறிவித்தார் அமைச்சர்’
    ‘ஒரு பெரிய நிறுவனம் தனது பொருள்களை வேறொரு பெயரில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்தது’
    ‘இந்திய அணி 600 ஓட்டங்கள் எடுத்துத் தன் முதல் ஆட்டத்தை முடித்துக்கொண்டதாக அறிவித்தது’

  • 2

    (தகவல்) தெரிவித்தல்.

    ‘சட்ட விரோதமான கூட்டம் நடைபெற்றால் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும்’
    ‘எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக அந்த எழுத்தாளர் அறிவித்திருக்கிறார்’