அறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அறு1அறு2

அறு1

வினைச்சொல்அற, அறுந்து, அறுக்க, அறுத்து

 • 1

  (கயிறு, இழை, தந்திக் கம்பி முதலியன) இழுபடுவதன்மூலமோ, விசைக்கு உட்படுவதன்மூலமோ துண்டாதல்.

  ‘கொடி சுவரில் உராய்ந்துஉராய்ந்து அறுந்தது’
  ‘ஒலிநாடா அறுந்து உள்ளே சிக்கிக்கொண்டது’
  ‘ஆணிவேர் அறாமல் எப்படிச் செடியைப் பிடுங்குவது?’
  உரு வழக்கு ‘எனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்றோ அறுந்துவிட்டது’
  உரு வழக்கு ‘இவ்வுலகத்தோடு தனக்கிருக்கும் பந்தங்கள் அறும் கணம் வந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்தார்’

அறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அறு1அறு2

அறு2

வினைச்சொல்அற, அறுந்து, அறுக்க, அறுத்து

 • 1

  (நூல், கயிறு போன்றவற்றை) இழுப்பதன்மூலமோ விசைக்கு உட்படுத்துவதன்மூலமோ துண்டாக்குதல்.

  ‘குதித்துக்குதித்தே குழந்தை தொட்டில் கயிற்றை அறுத்துவிட்டது’
  ‘நூலைப் பிடித்து வேகமாக இழுத்து அறுத்துவிட்டான்’
  உரு வழக்கு ‘நம்மைப் பிடித்திருந்த அடிமைத் தளையை அறுத்தெறிவதற்கு நடந்த போர்தான் சுதந்திரப் போராட்டம்’

 • 2

  (ஒரு பொருள்மீது) கத்தி போன்றவற்றை முன்னும் பின்னும் நகர்த்தி அதை வெட்டுதல்.

  ‘கத்தியில் எண்ணெய் தடவிப் பலாப்பழம் அறுத்தால் அதில் பிசின் ஒட்டாது’
  ‘கதிர் அறுக்கும் அரிவாள் சற்று மெல்லியதாக இருக்கும்’

 • 3

  (நீர், காற்று போன்றவை பொருள்களை) அரித்தல்.

  ‘கடல் நீர் பாறையை அறுத்திருந்தது’

 • 4

  (சிகிச்சைக்காக ஒரு உறுப்பை) கீறுதல்; நறுக்குதல்.

  ‘இப்போதெல்லாம் வலியே தெரியாமல் அறுத்துக் கட்டியை நீக்கிவிடுகிறார்கள்’

 • 5

  (மரச் சட்டத்தில் களிமண்ணை நிரப்பி வழிப்பதன்மூலம் செங்கல், ஓடு போன்றவற்றை) தயாரித்தல்.

  ‘நேற்றுதான் ஐந்தாயிரம் கல் அறுத்தோம்’

 • 6

  பேச்சு வழக்கு (ஒன்றைத் திரும்பத்திரும்பக் கூறிப் படிப்பவருக்கு அல்லது கேட்பவருக்கு) சலிப்பு உண்டாக்குதல்.

  ‘இவன் ஏன் வந்த வேலையை விட்டுவிட்டு அறுத்துக்கொண்டிருக்கிறான்?’