தமிழ் அறுவை யின் அர்த்தம்

அறுவை

பெயர்ச்சொல்

 • 1

  (கூட்டுச்சொற்களில் வரும்போது) (நோயுற்ற பாகத்தைக் குணப்படுத்த) அறுத்துச் செய்யப்படும் மருத்துவம்.

  ‘அறுவை மருத்துவர்’
  ‘அறுவை மருத்துவம்’
  ‘அறுவைச் சிகிச்சை’

 • 2

  பேச்சு வழக்கு சலிப்பூட்டும் நபர்; சலிப்பூட்டுவது.

  ‘இந்த அறுவைப் படம் பார்க்கவா என்னை அழைத்துவந்தாய்?’
  ‘அவனிடம் மாட்டிக்கொள்ளாதே. அவன் சரியான அறுவை’