தமிழ் அலங்கார அணிவகுப்பு யின் அர்த்தம்

அலங்கார அணிவகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (குடியரசு தினத்தில் குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் நிகழ்ச்சியின் பகுதியாக) ராணுவம் மற்றும் துணைநிலை ராணுவ வீரர்களின் அணி வகுப்பு, மாநிலங்களை அல்லது பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார ஊர்திகள் போன்றவை அணிவகுத்துச் செல்லும் நீண்ட ஊர்வலம்/மாநாடு போன்றவற்றின் சிறப்பு நிகழ்வாகச் செல்லும் அலங்கார ஊர்திகளின் ஊர்வலம்.

    ‘நவீன ஏவுகணைகள் அலங்கார அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன’
    ‘உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற அலங்கார அணிவகுப்பில் ஐந்திணைகளை விளக்கும் வாகனங்கள் இடம்பெற்றன’