தமிழ் அலட்டு யின் அர்த்தம்

அலட்டு

வினைச்சொல்அலட்ட, அலட்டி

 • 1

  (சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி மனத்தை) வருத்திக்கொள்ளுதல்; கவலைப்படுதல்.

  ‘நீ தப்பான காரியம் ஒன்றும் செய்துவிடவில்லையே; ஏன் மனத்தை அலட்டிக்கொள்கிறாய்?’
  ‘எதற்கும் தன்னை அலட்டிக்கொள்ளாத சுபாவம் அவருக்கு’

 • 2

  பெருமையடித்தல்.

  ‘உனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அலட்டாதே’