தமிழ் அலாரம் யின் அர்த்தம்

அலாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட நேரத்தை உணர்த்துவதற்காகக் கருவிகளில்) ஒலியெழுப்பும் வசதி/இந்தச் சாதனத்தைக் கொண்ட கடிகாரம்.

    ‘ஐந்து மணிக்கு அலாரம் அடித்தது’
    ‘காலை இரண்டு மணிக்கு அலாரம் வை’
    ‘மேசையின் மேல் வைத்திருந்த அலாரத்தை எங்கே காணோம்?’