தமிழ் அலு யின் அர்த்தம்

அலு

வினைச்சொல்அலுக்க, அலுத்து

 • 1

  (ஒன்றையே திரும்பத்திரும்பச் சொல்வது, கேட்பது, செய்வது போன்ற செயல்களால்) சலித்துப்போதல்; (ஒன்றில்) ஆர்வம் குறைதல்.

  ‘ஆயிரம் தடவை கேட்டாலும் அலுக்காத பாட்டு இது’
  ‘ஒரே பாணியில் அலுக்காமல் பல வருடமாக எழுதி வருகிறார்’
  ‘ஒரே மாதிரி சாப்பாடு அலுத்துவிட்டது’

 • 2

  குறைபட்டுக்கொள்ளுதல்; அங்கலாய்த்தல்.

  ‘‘வீட்டு வேலையும் செய்ய வேண்டும், பெற்றோரையும் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று அலுத்துக்கொண்டாள்’
  ‘‘ஆமாம்’ என்று அலுத்தாற்போல் பதில் சொன்னான்’

 • 3

  களைப்படைதல்; சோர்வடைதல்.

  ‘காணாமல்போன நாயை ஊர் முழுவதும் தேடி அலுத்துப்போய் வீடு வந்து சேர்ந்தேன்’