அலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அலை1அலை2அலை3

அலை1

வினைச்சொல்அலைய, அலைந்து, அலைக்க, அலைத்து

 • 1

  (ஒன்றைத் தேடி) பல இடங்களுக்குப் போதல்; சுற்றித் திரிதல்.

  ‘அறுவடைக்கு ஆட்களைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்’
  ‘பஞ்ச காலத்தில் மக்கள் வேலை தேடி அலைகிறார்கள்’
  ‘நண்பரின் வீட்டைக் கண்டுபிடிக்க மிகவும் அலைய வேண்டியதாகிவிட்டது’

 • 2

  (மனம்) நிலை கொள்ளாமல் இருத்தல்.

  ‘மனம் ஏன் இப்படி அலைகிறது?’

 • 3

  (ஒருவரின் பின்னால்) திரிதல்; சுற்றுதல்.

  ‘எப்போதும் அவர் பின்னாலேயே நாய் அலையும்’

 • 4

  (காற்றில்) இங்கும் அங்கும் அசைதல்.

  ‘குத்துவிளக்கின் சுடர் காற்றில் அலைந்தது’
  ‘அலையும் கூந்தல்’

 • 5

  (அளவுக்கு மீறி) ஆசைப்படுதல்.

  ‘ஏன் நகை, நகை என்று அலைகிறாய்?’

அலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அலை1அலை2அலை3

அலை2

வினைச்சொல்அலைய, அலைந்து, அலைக்க, அலைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு அசைவுகளை வேகமாக உண்டாக்குதல்.

  ‘சிறு காற்றால் அவ்வப்போது நீர் அலைக்கப்பட்டுச் சுழித்தது’
  உரு வழக்கு ‘கிராமத்திற்குள் நுழைந்ததும் பழைய நினைவுகள் மனத்தை அலைத்தன’
  உரு வழக்கு ‘மனிதனை அலைக்கிற மூன்று ஆசைகளுள் ஒன்று பொன்னாசை ஆகும்!’

அலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அலை1அலை2அலை3

அலை3

பெயர்ச்சொல்

 • 1

  காற்றின் இயக்கத்தால் (கடல், ஏரி போன்ற) நீர்ப்பரப்பிலிருந்து உயர்ந்தும் சுருண்டும் தொடர்ந்து வரும் நீர்த் திரள்.

 • 2

  இயற்பியல்
  ஒலி, ஒளி முதலியவை நேர்கோட்டில் செல்லாமல் சற்று எழும்பியும் தாழ்ந்தும் பரவிச் செல்லும் வடிவம்.

  ‘ஒலியலை’
  ‘ஒளியலை’
  ‘காந்த அலை’
  ‘மின்னலை’