அள -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அள1அள2

அள1

வினைச்சொல்அளக்க, அளந்து

 • 1

  (ஒரு பொருளின் முப்பரிமாணங்களையோ எடையையோ அதற்கான கருவிகளால்) கணக்கிடுதல்.

  ‘அக்பரின் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது’
  ‘பால்காரர் பாலை அளந்து ஊற்றினார்’

 • 2

  (தானியத்தை) அளந்து தருதல்.

  ‘குத்தகைக்காரர் இரண்டு வருஷமாக நெல் அளக்கவில்லை’

 • 3

  (ஒருவரைத் தரம் அறிய) எடை போடுதல்.

  ‘என்னை வைத்துக்கொண்டு நீ என் தம்பியை அளக்காதே!’
  ‘அவர் என்னைக் கண்ணால் அளந்தார்’

அள -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அள1அள2

அள2

வினைச்சொல்அளக்க, அளந்து

 • 1

  (ஒன்றை) பல மடங்காக்கி (சொந்தக் கற்பனையோடு) கூறுதல்.

  ‘என்ன, ஒரேயடியாக அளக்கிறாய்? நீ சொல்வதையெல்லாம் நாங்கள் நம்பி விடுவோமா?’