தமிழ் அளவில் யின் அர்த்தம்

அளவில்

இடைச்சொல்

 • 1

  ‘குறிப்பிடப்படுவதன் அல்லது குறிப்பிடப்படுபவரின் வரம்புக்குள்ளேயே’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘பிரச்சினை அமைச்சரின் கவனத்துக்குச் செல்லவில்லை. அவருடைய செயலர் அளவிலேயே முடிக்கப்பட்டது’
  ‘என்னளவில் அவன் நல்லவன்’
  ‘நீ சொல்வது பேச்சளவில் நன்றாக இருக்கிறது’

 • 2

  ‘(குறிப்பிட்ட நேரம், நாள், அளவு போன்றவை அல்லாமல்) சற்று முன் பின்னாக’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘காலை எட்டு மணி அளவில் விமானம் இறங்கியது’
  ‘அடுத்த மாதம் ஐந்தாம் தேதி அளவில் அவர் சென்னைக்கு வரலாம்’
  ‘கோடைக் காலத்தில் சென்னையில் 40ᵒC அளவில் வெப்பம் இருக்கும்’

 • 3

  காண்க: அளவுக்கு