தமிழ் அழுக்கு யின் அர்த்தம்

அழுக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (உடை, உடல் முதலியவற்றில் சேரும்) அசுத்தம்.

  ‘நகத்தில் சேர்ந்திருக்கிற அழுக்கைப் பார்!’
  ‘இந்தத் துண்டு ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்கும். இப்போது அழுக்கேறிக் கறுப்பாக இருக்கிறது’
  ‘அறையை ஏன் இவ்வளவு அழுக்காக வைத்திருக்கிறாய்?’

 • 2

  பேச்சு வழக்கு அழுக்கேறிய துணிகள்.

  ‘சலவைத் துணிகளைக் கொடுத்துவிட்டு அழுக்கு எடுத்துக்கொண்டு போகிறார்’
  ‘அழுக்கு மூட்டையை ஓரத்தில் வை’