தமிழ் அழுத்து யின் அர்த்தம்

அழுத்து

வினைச்சொல்அழுத்த, அழுத்தி

 • 1

  (ஒன்றை விசையுடன்) உள்நோக்கி அல்லது கீழ் நோக்கிப் போகச்செய்தல்; ஒரு பரப்பை விசையோடு நெருக்குதல்.

  ‘அவன் தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்தேன்’
  ‘தலைவலி தாங்காமல் நெற்றிப் பொட்டை அழுத்திக்கொண்டான்’
  ‘அழுத்தினால் பூட்டிக்கொள்ளும் பூட்டு’
  உரு வழக்கு ‘சோகத்தின் சுமை நெஞ்சை அழுத்தியது’

 • 2

  (விசையை) விரலால் அமுக்குதல்.

  ‘தேர்தல் அதிகாரி பொத்தானை அழுத்தினால்தான் வாக்கைப் பதிவுசெய்ய முடியும்’