தமிழ் அஸ்தமி யின் அர்த்தம்

அஸ்தமி

வினைச்சொல்அஸ்தமிக்க, அஸ்தமித்து

  • 1

    (சூரியன், சந்திரன், வெள்ளி போன்ற கிரகங்களும் நட்சத்திரங்களும்) தொடுவானத்திற்குக் கீழே போய்ப் பார்வையிலிருந்து மறைதல்.

    ‘சந்திரன் அஸ்தமிப்பதை யாரும் கவனிப்பதில்லை’
    உரு வழக்கு ‘என் கவலைகள் ஒருநாளும் அஸ்தமிக்கப்போவதில்லை’