தமிழ் ஆக யின் அர்த்தம்

ஆக

இடைச்சொல்

 • 1

  ‘மொத்தத்தில்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களை அல்லது ஒரு வாக்கியத்தின் இரண்டு பகுதிகளைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘சட்டை ஆறு, வேட்டி நான்கு, துண்டு மூன்று ஆகப் பதின்மூன்று உருப்படிகள்’
  ‘ஆக, தொண்ணூறு சாட்சிகள்மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது’

 • 2

  ‘ஆகவே’, ‘எனவே’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்த இரண்டாவது வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘கதை எழுதுங்கள் என்று நண்பர்கள் வற்புறுத்தினார்கள். ஆக, நானும் கதை எழுத ஆரம்பித்தேன்’

 • 3

  ‘மிகவும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘படம் ஆக மோசம்’
  ‘அந்த ஆள் ஆக மட்டம்’