தமிழ் ஆகிய யின் அர்த்தம்

ஆகிய

இடைச்சொல்

 • 1

  பட்டியலாகக் குறிப்பிடப்பட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இந்தப் பத்திரிகை வெளிவருகிறது’

 • 2

  ஒரு வரையறையையும் அது குறிப்பிடும் பொருளையும் தொடர்புபடுத்தி ஒரு தொடரை உருவாக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘பாலூட்டிகளாகிய யானை, பசு முதலிய விலங்குகளைப் பற்றி இப்போது நாம் காணலாம்’
  ‘காலை உணவாகிய இட்லியும் தோசையும்’
  ‘பனைமரம் என்பதைப் பனையாகிய மரம் என்று விரித்துச் சொல்லலாம்’
  ‘கோயமுத்தூரைச் சேர்ந்த பழனிச்சாமியின் பேரனும், மேற்படி ஊரைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகனுமாகிய நான் எழுதிக் கொடுத்தது...’
  ‘இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில் இந்த விழா நடைபெற்றது’