தமிழ் ஆக்கிரமிப்பு யின் அர்த்தம்

ஆக்கிரமிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட) போர் நடவடிக்கை.

  ‘இரு நாடுகளும் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டன’

 • 2

  உரிமை இல்லாத இடங்களில் அமைக்கப்படும் வீடு, கடை முதலியவை.

  ‘சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’

 • 3

  (ஒன்றின் அல்லது ஒருவரின் மேலோங்கிய) ஆதிக்கம்.

  ‘வெளிநாட்டுக் குளிர்பானங்களின் ஆக்கிரமிப்பால் உள்ளூர் குளிர்பானத் தொழில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது’
  ‘வடமொழியின் ஆக்கிரமிப்பால் தமிழில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன’