தமிழ் ஆசிரியர் யின் அர்த்தம்

ஆசிரியர்

பெயர்ச்சொல்

 • 1

  கல்வி, கலை போன்றவற்றைக் கற்பிப்பவர்.

  ‘உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்’
  ‘நடன ஆசிரியர்’

 • 2

  பத்திரிகையில் செய்திகளை அல்லது ஒரு நூலின் உள்ளடக்கத்தை அமைத்து வெளியிடும் பொறுப்பேற்பவர்.

  ‘பாரதியார் ஆசிரியராக இருந்த பத்திரிகை ‘இந்தியா’’

 • 3

  கட்டுரை, நாவல் முதலியன எழுதுபவர்.

  ‘இந்தச் சிறுகதை ஆசிரியர் பல புனைபெயர்களில் எழுதுகிறார்’