தமிழ் ஆசை யின் அர்த்தம்

ஆசை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றைக் குறித்த) எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்; விருப்பம்.

  ‘பட்டுப் புடவை வாங்க ஆசை’
  ‘அவருடைய நூல் வெளிவந்தது; நீண்ட நாள் ஆசையும் நிறைவேறிற்று’
  ‘பணத்தாசை பிடித்தவர்’

 • 2

  பாசம்; வாஞ்சை.

  ‘குழந்தை என்றால் அவருக்குக் கொள்ளை ஆசை!’
  ‘ஊரிலிருந்து வந்திருந்த தங்கையோடு ஆசையாகப் பேசிக்கொண்டிருந்தார்’

 • 3

  வெளிப்படையான விருப்பம்.

  ‘மாம்பழத்தை ஆசையோடு சாப்பிட்டார்’
  ‘நாய்க்குட்டியை ஆசையுடன் தடவிக்கொடுத்தான்’