தமிழ் ஆஜராகு யின் அர்த்தம்

ஆஜராகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

 • 1

  வாதி, பிரதிவாதி, சாட்சி, வழக்கறிஞர் ஆகியோர் ஒரு வழக்கை முன்னிட்டு நீதிமன்றத்துக்கு வருதல்/விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உட்படுவதற்காகச் சம்பந்தப்பட்ட ஒருவர் வருதல்.

  ‘உயர் நீதிமன்றத்தில் அவர் ஒரு வழக்கில் ஆஜராகி வாதாடுவது இதுவே முதல் தடவை’
  ‘அரசு ஊழியரை அடுத்த வாரம் நேரில் ஆஜராகும்படி விசாரணைக் குழு கேட்டிருக்கிறது’

 • 2

  அருகிவரும் வழக்கு (கூப்பிட்டதும்) வந்து சேர்தல்.

  ‘அவன் பத்து நிமிஷத்தில் ஆஜரானான்’